டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்ற மாநாட்டின் போது, ஹிட்லர் பாணியில், சல்யூட் அடித்த பாஸல் கன்டோனல் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தவறான நடத்தைக்காக பாஸல் கன்டோனல் காவல்துறை ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளதாக அதன் பேச்சாளர் ரூவன் ப்ரூக்கர் உறுதிப்படுத்தினார்.
ஜனவரி மாதம் உலக பொருளாதார மன்ற மாநாட்டின் போது இந்த காவல்துறை அதிகாரி எதிர்மறையான கவனத்தை ஈர்த்திருந்தார்.
மேலும் ஹிட்லர் சல்யூட்டைக் காண்பித்திருந்தார்.
அத்துடன் அவர் மீது சக ஊழியர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
இந்த நிலையில், முதல் நடவடிக்கையாக, பாஸசலின் பாதுகாப்பு இயக்குநர் ஸ்டெஃபனி ஐமன், காவல்துறை அதிகாரி மார்ட்டின் ரோத்தை பணிநீக்கம் செய்துள்ளார்.
மூலம்- swissinfo