சுவிஸ் பொருட்கள் மீதான அமெரிக்காவின் அதிக வரிகளுக்கு எதிராக உடனடி எதிர் நடவடிக்கைகளை எடுக்க, சுவிஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்க கொள்கையின்படி, அனைத்து சுவிஸ் பொருட்களின் ஏற்றுமதிகளும் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் போது 31 அல்லது 32% சுங்க வரிகளுக்கு உட்படும்.
இதேபோன்ற பொருளாதாரம் கொண்ட மற்ற அமெரிக்க வர்த்தக பங்காளிகளுடன் ஒப்பிடுகையில், சுவிட்சர்லாந்து குறிப்பாக அதிக கூடுதல் கட்டணங்களை எதிர்கொள்ளும்.
சுவிஸ் ஏற்றுமதிகள் சனிக்கிழமை (ஏப்ரல் 5) முதல் 10% மற்றும் புதன்கிழமை (ஏப்ரல் 9) முதல் 21% கூடுதல் வரிகளுக்கு உட்பட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பெடரல் கவுன்சிலின் கூற்றுப்படி, இயந்திரங்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் விவசாயப் பொருட்களான கோப்பி கப்சூல்கள், ஊக்க பானங்கள், சீஸ் மற்றும் சொக்லட் போன்ற முக்கியமான ஏற்றுமதி பொருட்கள் கூடுதல் வரியால் பாதிக்கப்படும்.
இருப்பினும், மருந்துத் துறையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கூடுதல் கட்டணங்கள் எதுவும் தற்போது திட்டமிடப்படவில்லை.
ஃபெடரல் கவுன்சில் இப்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த நடவடிக்கைகள் மற்றும் சுவிட்சர்லாந்தில் அவற்றின் தாக்கத்தை ஆழமாக ஆய்வு செய்ய விரும்புகிறது என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வர்த்தக பதற்றத்தை அதிகரிப்பது சுவிட்சர்லாந்து ஆர்வம் கொள்ளவில்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மூலம்- Swissinfo