Münchwilen இல் இரண்டு குழந்தைகளின் தாயாரான 47 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் தொடர்பாக Thurgau பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 53 வயதுடைய சுவிஸ் நபர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் தந்தை, தாய், 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றே வசதித்து வந்துள்ளது.
மூலம்- 20min.