இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் பயணமாக நேற்றிரவு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
அவருக்கு இன்று சுதந்திர சதுக்கத்தில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
இதையடுத்து இருதரப்பு சந்திப்புகள், பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும்.
இந்தப் பேச்சுக்களின் போது, பாதுகாப்பு உள்ளிட்ட 8 உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளன.
இந்தியப் பிரதமர் இன்று சம்பூர் சூரிய மின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு இந்திய திட்டங்களையும் காணொலி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.
இந்தியப் பிரதமர் தங்கியுள்ள விடுதியில் நேற்றிரவு, நளின் கம்வாரி மற்றும் ஸ்ரீ அநுர பொம்மலாட்ட கழகத்தினருக்கு சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை பிரதி பலித்த பொம்மலாட்டதினை கண்டு களித்தார்.