கடுமையான குற்றவாளிகளான வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கையாள்வதற்காக சுவிஸ் அரசாங்கமும் கன்டோன்களும் இணைந்து செயலணி ஒன்றை அமைத்து வருகின்றன.
இடம்பெயர்வுக்கான அரச செயலகத்தின் தகவல் படி, அத்தகைய குற்றவாளிகளை தொடர்ந்து தடுத்து வைப்பது மற்றும் நாடு கடத்தல்களை அமுல்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
கன்டோனல் நீதி மற்றும் காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டத்திற்கு மத்திய அரசு, கன்டோன்கள், நகரங்கள் மற்றும் நகராட்சிகளின் புகலிடக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதேநேரம், நாடு கடத்தும் நோக்கில் அத்தகைய நபர்களை தடுத்து வைப்பதற்கான சட்ட விதிகள் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இத்தகைய தடுப்புகளை எளிமைப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
மூலம்- swissinfo