டச்சு தள்ளுபடி விற்பனையாளரான Action இன்று சுவிட்சர்லாந்தின் முதல் கடையை ஜூரிச்சில் உள்ள Bachenbülach இல் திறக்கிறது.
இங்கு, வாடிக்கையாளர்கள் அனைத்து வகையான உணவு அல்லாத பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கலாம்.
இந்த தள்ளுபடி வீட்டுப் பொருட்கள், சமையலறை தோட்டம், மற்றும் செல்லப்பிராணிகள் உட்பட 15 வகைகளின் தயாரிப்புகளுக்குப் பொருந்தும்.
பாடசாலை மற்றும் அலுவலக பிரிவில் மட்டும், ஒரு பிராங்குக்கும் குறைவான விலையில் 28 பொருட்கள் உள்ளன.
ஒவ்வொரு வாரமும் 150 புதிய தயாரிப்புகள் சேர்க்கப்படும்.
மேலும் 1,500 தயாரிப்புகளின் விலை எப்போதும் இரண்டு பிராங்குகளுக்குக் கீழ் இருக்கும்.
மொத்தம் சுமார் 6,000 தயாரிப்புகள் இருக்கும்.
ஆரம்பத்தில், Bachenbülach இல் மட்டுமே செயற்படும் இந்தக் கடை, Olten, Delémont மற்றும் Basel ஆகிய இடங்களிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இந்தப் புதிய கிளைகள் Migros மற்றும் Coop போன்ற சில்லறை விற்பனையாளர்களுக்கு அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மூலம்- 20min