Oberwil இல் உள்ள Coop பல்பொருள் அங்காடியின் தரிப்பிட நுழைவாயிலில் புதன்கிழமை காலை, ஒரு கார் பாதியில் தொங்கிக் கொண்டிருந்தது.
சுமார் 100 வயதான ஓட்டுநரே கனது காரை வெளியே எடுக்கும் போதே இந்த விபத்து நேரிட்டுள்ளது.
விபத்து நடந்தவுடன் அந்த நபர் காரில் இருந்து இறங்கினார். இதையடுத்து கிரேன் மூலம் கார் அப்புறப்படுத்தப்பட்டது.
கார் ஒட்டுநர் 99 வயதானவர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
எனினும், அவரது ஓட்டுநர் அனுமதி இடைநிறுத்தப்பட்டதா என்பதை கூற முடியவில்லை.
மூலம்- 20min