Rheinfelden இல் சுவர் ஒன்றின் மீது கார் மோதிய விபத்தில் இளம் பெண் சாரதி உயிரிழந்துள்ளார்.
நேற்றுக் காலை 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறிய கார் ஒன்றை ஓட்டிச் சென்ற 29 வயதுடைய பெண், பல வாகனங்களுடன் மோதிய பின்னர் தேவாலய சுவர் மீது மோதினார்.
இந்த விபத்தில், பலத்த காயம் அடைந்த அவர் நேற்றிரவு மரணமானார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.