Kilchberg இல் காருடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 53 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வளைவு ஒன்றில் திரும்பிய போது இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியுள்ளன.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணமானார்.
அதேவேளை, 62 வயதுடையவரான கார் சாரதியும் இந்த விபத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பாசல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம் -bluewin