Lausanne மற்றும் Yverdon இடையே A1 நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
நேற்றுப் பிற்பகல் 2.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Fribourg கன்டோனில் உள்ள Ependes கிராமத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உரிய நேரத்தில் பயணிகள் வெளியேறியதால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதனால், Yverdon-Süd நோக்கிய A1 நெடுஞ்சாலை மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த தீவிபத்து போக்குவரத்து விபத்தினால் ஏற்படவில்லை என்றும், வாகனத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் ஏற்பட்டதாக Vaud கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம் -bluewin