Schwarzenburg நகரம் உருவாக்கப்பட்டு 1000வது ஆண்டு நிறைவை 2025 இல் கொண்டாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அது 1030 மே 21ஆம் திகதி நிறுவப்பட்டதாக முன்னர், பதிவுகள் குறிப்பிட்டிருந்தன.
ஆனால் புதிதாக கண்டறியப்பட்ட ஒரு ஆவணத்தில் அது 1025 ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனால் 2030இல் 1000 ஆவது ஆண்டைக் கொண்டாடவிருந்த Schwarzenburg நகரம் 5 ஆண்டுகள் முன்னதாகவே அதனைக் கொண்டாடவுள்ளது.
அவசர அவசரமாக ஆண்டுவிழா ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
விரிவான நிகழ்ச்சி மற்றும் புத்தகம் வெளியீடு என்பனவும் இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இடம்பெறவுள்ளது.
மூலம்-20min

