Epagny இல் தீக்கிரையாகிய வீடு ஒன்றிற்குள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்றுக்காலை அந்தப் பகுதியில் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டதை அடுத்து பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
- Advertisement -

அதற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் வீடு ஒன்றுக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்ட பின்னர், துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுள்ளது.
அதையடுத்து வீடு தீப்பற்றி எரியத் தொடங்கியது.
பொலிசார் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் உள்ளே சென்ற போது ஒருவர் துப்பாக்கியுடன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றனர்.
மூலம்- 20min


