11.2 C
New York
Sunday, May 3, 2026

தீக்கிரையாகிய வீட்டில் இரண்டாவது சடலமும் மீட்பு- இறந்தவர்கள் குறித்து மர்மம் நீடிப்பு.

Fribourg கன்டோனில் உள்ள Epagny,இல் துப்பாக்கி வேட்டுச் சத்தத்தை அடுத்து தீக்கிரையாகிய வீட்டில் இருந்து இரண்டாவது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து வீடு ஒன்று பற்றியெரிவதை அறிந்து பொலிசாரும் தீயணைப்பு பிரிவினரும் அங்கு விரைந்தனர்.

வீட்டில் இருந்து துப்பாக்கியும் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டதாக பொலிசார் முன்னர் அறிவித்திருந்தனர்.

தீ அணைக்கப்பட்ட பின்னர் கருகிய நிலையில் மற்றொரு சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் அந்த வீட்டில் வசித்தவர்கள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

81 வயதுடைய இரண்டு பேரே அந்த வீட்டில் வசித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் யார் என்று விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மூலம்- 20min

Related Articles

Latest Articles