20.8 C
New York
Tuesday, June 23, 2026

வறண்ட வானிலை இன்றுடன் முடிவு- இன்று பரவலாக மழை பெய்யும்.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து சுவிட்சர்லாந்தில் நிலவி வரும் வறண்ட வானிலை இன்றுடன் முடிவடைகிறது.

நேற்று பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

டிசினோ மற்றும் வாலைஸில் பெய்யத் தொடங்கிய மழை, பின்னர் பெர்ன் பகுதி மற்றும் மத்திய சுவிட்சர்லாந்திற்கும் பரவியது.

இன்று முதல், நாடு முழுவதும் மழை பெய்யும். குறிப்பாக வடமேற்கில் மழை வீழ்ச்சி அதிகம் இருக்கும்.

காற்றின் காரணமாக மத்திய மற்றும் கிழக்கு சுவிட்சர்லாந்தில் ஓரளவு வெயில் இருக்கும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles