22.8 C
New York
Tuesday, September 9, 2025

வாய் புற்றுநோயினால் தினம் 3 பேர் மரணம்

ஈழத்தில் வாய் புற்றுநோயினால் தினமும் 3 பேர் உயிரிழப்பதாக மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க கூறியுள்ளார் .

இலங்கையில் நாளாந்தம் சுமார் 6 வாய் புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக அவர் கூறினார்.

வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டொக்டர் நிலந்த ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

அந்த வகையில் இலங்கையில் 5 வயதுடைய குழந்தைகளில் 63 வீதமானோர் பற்கள் சிதைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும்பாலான குழந்தைகள் இரவு உறங்கச் செல்வதற்கு முன் பல் துலக்குவதில்லை என பாடசாலை சுகாதார ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles