23 C
New York
Thursday, April 24, 2025

மாவீரர் துயிலுமில்ல நுழைவாயிலை அகற்ற நீதிமன்றத்திடம் சென்ற போலீசார்

கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலுமில்ல நுழைவாயிலில் உள்ள வளைவை அகற்றுவதற்கு பொலிஸார் நீதிமன்றத்தை அடைந்துள்ளனர் .

வளைவை அகற்ற பூநகரி பிரதேச சபை செயலாளருக்கு பணிப்பு விடுக்குமாறு கோரி முழங்காவில் காவல்நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றை நாடியுள்ள நிலையில் .

இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜராக பூநகரி பிரதேசசபை செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு மாவீரர் தினத்தை முன்னிட்டு தற்காலிக வளைவு ஒன்று துயிலுமில்ல நுழைவாயிலில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் , குறித்த வளைவினை அகற்றுமாறு முழங்காவில் காவல்துறை பொறுப்பதிகாரி அழுத்தங்களை பிரயோகித்தநிலையில், இலங்கை முப்படைகளதும் காவல்துறையினரதும் சட்டவிரோத கட்டடங்கள் பலவும் குவிந்துள்ள நிலையில் சாதாரண வளைவு எத்தகைய நெருக்கடியை தருகின்றதென சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Latest Articles