Basel இல் உள்ள Lehenmattstrasse இல் penthouse apartment இல் நேற்று தீவிபத்து ஏற்பட்டது.
நேற்றுக் காலை 11:00 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
திடீரென்று, ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதை அடுத்து பின்னர் தீப்பிழம்புகளைப் பார்த்தாக, ஒரு குடியிருப்பாளர் தெரிவித்துள்ளார்.
அடுக்குமாடி கட்டடத்தின் நான்காவது மாடியிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடியிருப்பில் இளைஞர்கள் வசித்து வந்தனர்.
தீவிபத்தை அடுத்து அனைத்து குடியிருப்பாளர்களும் உடனடியாக கட்டடத்தை விட்டு வெளியேறி வெளியே கூடினர்.
தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவை சம்பவ இடத்தில் இருந்தன.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மூலம்- 20min