மென்ட்ரிசியோவில் 32 வயதுடைய மோல்டோவா நாட்டைச் சேர்ந்த கொள்ளையர் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து முழுவதும் இடம்பெற்ற 69 திருட்டுக் குற்றங்களுக்கு தான் பொறுப்பேற்பதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தக் குற்றங்களில் வணிக நிறுவனங்களில் நடந்த கொள்ளைகளும் அடங்கும்.
இவர் 6 இலட்சம் சுவிஸ் பிராங்குகளைக் கொள்ளையடித்துள்ளார். மேலும் 3 இலட்சத்து85 ஆயிரம் பிராங்கிற்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளார்.
2016 நொவம்பருக்கும் 2024 ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் இந்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என பெர்ன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் 23 குற்றங்கள் பெரன் கன்டோனில் இடம்பெற்றுள்ளன.