Brugg இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மதியம், BMW காரில் வந்தவர்கள், Skoda கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
இந்த சம்பவத்தில், அந்தக் காரில் இருந்த இரண்டு பேரில் 31 வயதுடைய ஒருவர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, 24 வயதுடைய ஒருவரும், பின்னர் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டனர்.
குற்றச் சம்பவ இடங்களில் தடயவியல் விசாரணைகள் இரவு வரை தொடர்ந்து இடம்பெற்றன.
மூலம்- 20min