இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரங்கள் நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, வவுனியா, மட்டக்களப்பு, உள்ளிட்ட 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகள் என, மொத்தம் 339 உள்ளூராட்சி சபைகளுக்கு, நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது.
மொத்தம், 4877 வட்டாரங்களில் நடக்கவுள்ள இந்த தேர்தலில் 70 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
13,759 வாக்களிப்பு நிலையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்களிப்பு மாலை 4 மணியளவில் நிறைவடையும்.
அதையடுத்த அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே வாக்குகள் எண்ணப்படும்.