இஸ்ரேல் தலைநகர், டெல் அவிவின் பென்-குரியன் விமான நிலையத்திற்கு அருகே ஏவுகணை விழுந்து வெடித்ததை அடுத்து, சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் (SWISS), சூரிச்சிலிருந்து டெல் அவிவ் செல்லும் விமானத்தை நேற்று ரத்து செய்தது.
அடுத்து வரும் நாட்களில் விமான சேவை தொடருமா என்பது குறித்து விமான நிறுவனம் எந்த தகவலையும் வழங்கவில்லை.
டெல் அவிவ் செல்லும் SWISS விமானம் சூரிச்சிலிருந்து காலை 11:50 மணிக்கு புறப்பட்டு உள்ளூர் நேரப்படி மாலை 5:00 மணிக்கு (சுவிஸ் நேரப்படி மாலை 4:00 மணி) டெல் அவிவில் தரையிறங்க திட்டமிட்டிருந்தது.
இஸ்ரேலிய மீட்பு சேவையின்படி, ரொக்கட் தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்தனர்.
யேமன் ஹவுதி போராளிகள் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இதற்கு பல மடங்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளார்.
“எங்களை யார் தாக்கினாலும், நாங்கள் ஏழு மடங்கு திருப்பித் தாக்குவோம்” என்று அவர் அறிவித்துள்ளார்.
மூலம்- swissinfo