16.5 C
New York
Wednesday, September 10, 2025

புதிய இராணுவத் தளபதியை தேடும் பாதுகாப்பு அமைச்சர்.

பதவி விலகும் இராணுவத் தளபதி தோமஸ் சுஸ்லிக்கு பதிலான புதிய தளபதியை தேடும் பணியை சுவிஸ் பாதுகாப்பு அமைச்சு தொடங்கியுள்ளது.

இதற்கென, 50 அதிகாரிகளின் சுயவிபரங்களை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் சுஸ்லர் ஒரு தேர்வுக் குழுவை உருவாக்கியுள்ளார்.

புதிய இராணுவத் தளபதியை தேர்ந்தெடுப்பதை, கோர்ப்ஸ் கொமாண்டர்கள், டிவிஷனல் கொமாண்டர்கள் மற்றும் பிரிகேடியர்களுக்கு, பெரும்பாலும் தொழில்முறை வீரர்களுக்கு மட்டுமே வரையறுக்க பாதுகாப்பு அமைச்சர்  விரும்புகிறார்.

இதனால், இந்த ஆண்டு இறுதியில் பதவி விலகவுள்ள தற்போதைய இராணுவத் தளபதி தோமஸ் சுஸ்லியின் சுயவிவரத்திலிருந்து வேறுபட்ட ஒரு சுயவிபரமுடைய ஒருவரை அவர் தேடுகிறார்.

தேர்வுக் குழுவில் ஒரு பெண் உட்பட 50 மூத்த அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles