27.8 C
New York
Monday, July 14, 2025

மேயரைப் பதவியில் இருந்து நீக்கிய Perroy கிராமம்.

Vaud கன்டோனில் உள்ள Perroy கிராமம் அதன் மேயரை பதவியில் இருந்து அகற்றியுள்ளது.

தனிப்பட்ட நலனுக்கான தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மேயர் Didier Haldimann பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு முதல் அவர் எந்த நகராட்சி கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை.

Perroy வாக்காளர்களில் 556 பேர் அவரை மேயர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

25 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேயரைப் பதவியில் இருந்து அகற்றுவது தொடர்பாக Perroy மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த Vaud கன்டோனல் அரசாங்கம் தீர்மானித்த போது, Didier Haldimannஅதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

எனினும் உயர்நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்காத நிலையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

மூலம்-bluewin

Related Articles

Latest Articles