பெர்ன் கன்டோனில், ஈகர் மலையில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்றும், மற்றொருவர் மருத்துவமனையில் இறந்தார் என்றும் பெர்ன் கன்டோனல் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
பனிச்சரிவு தொடங்கிய போது மொத்தம் எட்டு பேர் அந்தப் பகுதியில் இருந்தனர். அவர்களில் ஏழு பேர் பனியில் புதைந்தனர்.
இரண்டு பேர் கொண்ட ஒரு குழுவும், ஐந்து பேர் கொண்ட மற்றொரு குழுவும் உயரமான மலைகளில் பனிச்சறுக்கு சுற்றுலா சென்றிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
காயமடைந்த நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் விமானம் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அந்தப் பகுதியில் இருந்த மற்றொரு நபருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மோசமான வானிலை காரணமாக நேற்று மாலையிலேயே அவரை விமானம் மூலம் அழைத்து வர முடிந்துள்ளது.
மூலம்- swissinfo