17.5 C
New York
Wednesday, September 10, 2025

பாசலில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதல் – 3 பொலிசார் காயம்.

யூரோவிஷன் பாடல் போட்டியில் இஸ்ரேல் பங்கேற்பதற்கு எதிராக நேற்று அனுமதியின்றி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 400 பேரை பொலிசார்  சோதனை செய்தனர்.

பாசல் நகர மையத்தில் நேற்று மாலை 7 மணியளவில், நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் 700 முதல் 800 பேர் வரை பங்கேற்றனர்.

அங்கு இஸ்ரேலிய கொடிகளை ஏந்திய இரண்டு ஆண்கள் நுழைந்த போது வாக்குவாதம் ஏற்பட்டது.

இஸ்ரேலிய கொடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் பறிக்க முயன்ற போது, ஒரு பொலிஸ் குழு தலையிட்டு, பேரணியில் இருந்தவர்களை கலைத்தது.

ஆர்ப்பாட்டப் பேரணியைத் தடுக்க, பொலிஸ் வாகனங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்னர், அவர்கள், நகரத் தொடங்கி ஒரு பாலத்தைக் கடந்து நகரத்தின் பெட்டிட்-பேல் பகுதியை அடைந்தனர்.

அங்கு, யூரோவிஷன் போட்டிக்கான அதிகாரப்பூர்வ பொது மக்கள் பார்வையிடும் பகுதியை நோக்கி செல்ல முயன்ற போது,  பொலிசார் தடுத்தனர்.

இதன்போது, இறப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அப்போது பொலிசார், அணிவகுப்பை நிறுத்தி சுமார் 500 பேரை சுற்றி வளைத்தனர். அவர்களில் 400 பேர் சோதனையிடப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, ​​பொலிசார் மீது பட்டாசுகள் வீசப்பட்டன.

இதில், மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு போராட்டக்காரர் காயமடைந்து சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றார் என்று பொலிசார் தெரிவித்தனர்.

இதனால் நகர மையத்தில் ட்ராம் போக்குவரத்து ஒரு மணி நேரம் தடைப்பட்டது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles