Thurgau கன்டோனில், வீடு வைத்திருப்பவர்கள் சொத்து வரி செலுத்த வேண்டியதில்லை.
நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தகுதியுள்ள வாக்காளர்களில் 69 சதவீதம் பேர் அதை ஒழிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
வீடு வைத்திருப்பவர்கள், சொத்து மதிப்பில் 0.5 வீதம் வரியாகச் செலுத்த வேண்டியிருந்தது.
இது ஆண்டுதோறும் சுமார் 36 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை கன்டோன் மற்றும் நகராட்சிகளுக்கு வருமானத்தை கொண்டு வந்தது.
எனினும் இந்த தீர்மானம் 2029 வரை நடைமுறைக்கு வராது.
மூலம்- 20min.