Herisau இல் இன்று மதியம் விநியோக வாகனம் ஒன்று தீயணைப்பு நிலைய கட்டத்துடன் மோதி உள்ளே புகுந்தது.
53 வயது பெண் ஒருவர் காலை 11:00 மணியளவில் ஆல்ப்ஸ்டீன்ஸ்ட்ராஸ் வழியாக விநியோக வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது, லாங்கெலன் சந்திப்பில், வீதியின் வலது பக்கத்தை விட்டு விலகி, பழைய தீயணைப்பு நிலையத்தில் மோதினார்.
53 வயதுடைய சாரதிக்கு காயங்கள் ஏற்பட்டன. அவசர சேவைகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றன.
வாகனத்தின் மோதியதால் தீயணைப்பு நிலையம் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்தது.
மூலம்- 20min