பெர்ன் கன்டோனல் பொலிசார், ஒரு பாரிய மனித கடத்தல் வலையமைப்பை முறியடித்துள்ளனர்.
146 சீனப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக சுவிட்சர்லாந்திற்கு கவர்ந்திழுத்ததாக இந்த வலையமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டதுடன், அவர்களின் வருமானத்தில் பாதியை மோசடி செய்பவர்களுக்கு செலுத்த வேண்டியிருந்தது.
விசாரணைகள் முடிந்ததும் கூடுதல் விவரங்கள் வழங்கப்படும் என பெர்ன் கன்டோனல் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
மூலம்- swissinfo

