பெர்னில் உள்ள Neubrückstrasse இல், நேற்று மாலை 5 மணியளவில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான கார் கொங்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி அதில் சிக்கிக் கொண்டது.
கிரேன் மூலம் காரை மீட்டு பின்னர் இழுத்துச் செல்ல வேண்டியிருந்தது.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
கார் எப்படி இத்தகைய விபத்தில் சிக்கியது என்று இன்னமும் தெரிவிக்கப்படவில்லை.
மூலம்- 20min