பிளாட்டனில் பனிப்பாறை சரிந்ததைத் தொடர்ந்து, கிராமத்திற்கு மேலே ஒரு ஆபத்தான நீர்த்தேக்கம் உருவாகியுள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைலர் மற்றும் கிப்பல் நகராட்சிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை பிற்பகல், ஏற்பட்ட பனிப்பாறை சரிவினால், பிளாட்டன் கிராமத்தின் 90 சதவீதம் புதையுண்டு போனதுடன் 130 க்கும் மேற்பட்ட அழிந்து போயின.
பனிப்பாறை சரிந்த பிறகு, லோன்சா நதி மற்றும் ஜிசென்டெல்லா ஓடை என்பதை தடைப்பட்டு, பிளாட்டனில் உள்ள சிதைவுகளுக்குப் பின்னால் ஒரு ஏரி உருவாகியுள்ளது.
இதனால், அங்குள்ள வீடுகள் இப்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
லோன்சா நதியில் உருவாகியுள்ள அணைக்கட்டு ஒரு “மோசமான சூழ்நிலையை” பிரதிபலிக்கிறது, என்று பெர்ன் பல்கலைக்கழகத்தின் புவியியல் இயக்குனர் ஃபிளேவியோ அன்செல்மெட்டி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் நிலச்சரிவு, பனிப்பாறை சரிவு போன்ற சங்கிலி எதிர்வினைகள் தொடரலாம்.
லோன்சா நதியில் உருவாகியுள்ள அணைக்கட்டின் முகடு வரை தண்ணீர் நிரம்பினால், மிக மோசமான சூழ்நிலை ஏற்படும் என்று அவர் கூறினார்.
அந்த அணையின் சில பகுதிகள் அகற்றப்படலாம் அல்லது முற்றிலுமாக இடிந்து விழும்.
இந்த நிலையில், பள்ளத்தாக்கில் மேலும் கீழ்நோக்கி உள்ள சமூகங்கள் கடுமையான வெள்ள அலைகள் மற்றும் குப்பைகள் பாய்வதால் ஆபத்தில் சிக்கும்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வைலர் மற்றும் கிப்பலின் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மூலம்- bluewin