பாசலில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 7 ஆவது மாடியில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உடனடியாக விரைந்த தீயணைப்பு படையினர் ஏழாவது மாடியில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைத்த பின்னர் அங்கு பெண் ஒருவரின் சடலத்தை மீட்டனர்.
ஏனைய தளங்களில் இருந்த குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உணவு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
உயிரிழந்த பெண்ணும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.