பிளாட்டனில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து, அங்கு சேதமடையாமல் இருந்த கார்கள் அகற்றப்படுகின்றன.
ஒரு போக்குவரத்து ஹெலிகொப்டர் பல வாகனங்களை Wiler இக்கு ஒவ்வொன்றாக கொண்டு வரும் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டது.
பிளாட்டனில் எஞ்சியிருந்த கடைசி பசு ஹெலிகொப்டர் மூலம் வெளியேற்றப்பட்டது.
“லோனி” என்ற அந்தப் பவு வெளியேற்றப்பட்ட பிறகு, தற்காலிகமாக ஜோசப் போனியின் கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு கால் பாதிக்கப்பட்டிருப்பதால், மற்ற பசுக்களுடன் அதை கொண்டு செல்ல முடியவில்லை.
கிராமத்தில் வசித்த அனைவரும் முன்பே வெளியேற்றப்பட்டதால், உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
மூலம்- 20min.