19.8 C
New York
Thursday, September 11, 2025

மீட்புப் பணிகளில் இறங்க முடியாத நிலை- ஆபத்து நீடிக்கிறது.

பனிப்பாறை சரிவினால் கிட்டத்தட்ட முற்றாக அழிந்துள்ள பிளாட்டன் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியில், எந்தவொரு சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வது ஆபத்தானது என்று வாலெய்ஸ் கன்டோன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லோட்சென்டல் பள்ளத்தாக்கின் இருபுறமும் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

புதன்கிழமை நிலச்சரிவு தொடங்கிய கிளீனர் நெஸ்டோர்ன் மலையின், நிலைமையும் இன்னும் நிலையற்றதாக உள்ளது.

பல இலட்சம் கன மீட்டர் பாறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பள்ளத்தாக்கில் தற்போது பாறைகள், பனிக்கட்டி மற்றும் நீர் குவிந்து கிடப்பதால், சிதைவுகள் பாய்ந்தோடக் கூடிய நிலை உள்ளது.

புதன்கிழமை, பிளாட்டன் கிராமத்திற்கு மேலே உள்ள முழு பிர்ச் பனிப்பாறையும் இடிந்து விழுந்தது.

இது இரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்ட பள்ளத்தாக்குப் பகுதியை மூடியுள்ளது.

கிராமத்தின் பெரும்பகுதி புதைந்துள்ளதுடன், லோன்சா நதியையும் தடுத்துள்ளது.

இது ஒரு ஏரியை உருவாக்கியுள்ளதுடன் இது நிலச்சரிவின் போது தப்பிய  வீடுகளையும் வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.

ஆறு மற்றும் ஏரியில் தேங்கிய நீர், மீது தண்ணீர் பாய்ந்தால், புதிய நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்று அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில், கோபன்ஸ்டீனில் இருந்து பிளாட்டன் நோக்கி செல்லும் வீதி மூடப்பட்டுள்ளது.

உள்ளூர்வாசிகள் மற்றும் அவசர வாகனங்கள் மட்டுமே கடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles