19.8 C
New York
Thursday, September 11, 2025

அடுக்குமாடிக் குடியிருப்பில் வெடிபொருள் தயாரித்தவர் கைது.

ஆர்காவ் கன்டோனில் உள்ள  ஆப்ட்ரிங்கனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில்,பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆர்காவ் மாகாண காவல்துறை மற்றும் சூரிச் தடயவியல் நிறுவனத்தின் நிபுணர்கள், தீயணைப்புத் துறை மற்றும் அம்புலன்ஸ் விரைந்து சென்று, . அடுக்குமாடி கட்டடத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதுடன் அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.

குற்றவியல் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன

33 வயது குடியிருப்பாளர் ஒருவர் இரசாயனங்களைப் பரிசோதித்து வெடிக்கும் கலவையை உருவாக்கியதாகத் தெரிய வருகிறது.

கன்டோனல் காவல்துறை விசாரணையை நடத்தி வருகிறது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles