பிளாட்டன் கிராமத்தை மண்ணில் புதைத்த நிலச்சரிவு, லோன்சா நதிக்கு குறுக்கே அணையை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு நதி நீர் வேகமாக நிரம்பி வருவதால், புதிய ஆபத்து தோன்றியுள்ளது.
இன்று அதிகாலை அந்த அணை நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால், மண்அரிப்பு ஏற்படலும் லோன்சா நதியில் பாரிய வெள்ளம் கீழ் நோக்கிப் பாயும் ஆபத்தும் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் கீழ் பகுதிகளில் உள்ள கிராமங்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
அங்குள்ள மக்கள் பலர் வெளியேற்றப்பட்டுள்ள அதேவேளை மேலும் பலரை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
மூலம்- 20min.