20.1 C
New York
Wednesday, September 10, 2025

நடிகர் ராஜேஷ் காலமானார்.

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் ராஜேஷ் (75 வயது) உடல் நலக் குறைவு காரணமாக இன்று  காலமானார்.

1949ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்த இவர்,  கதாநாயகனாக வலம் வந்து, பின்னர் குணசித்திர நடிகராகவும், சின்னத் திரை நடிகராகவும், திரையுலகில் வலம் வந்தவர்.

1974இல் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய “அவள் ஒரு தொடர்கதை” படத்தின் மூலம் நடிகர் ராஜேஷ் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

அந்த ஏழு நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர் தண்ணீர், ஆட்டோகிராப், ஒரு கல் ஒரு கண்ணாடி, குழந்தை ஏசு, ஜெய்ஹிந்த், வரலாறு, ரமணா, யாரோ எழுதிய கவிதை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, மகாநதி, பொங்கலோ பொங்கல் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழி்ல் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில்  நடித்திருந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles