பாரிய பனிப்பாறை சரிவினால், Valais கன்டோனில் உள்ள Blatten கிராமத்தின் பெரும்பகுதியை பனி, சேறு மற்றும் சிதைவுகளுக்குள் புதைத்துள்ளது.
இதனால் பெருமளவு வீடுகள் அழிந்துள்ளதாகவும் 64 வயதுடைய ஒருவர் காணாமல் போயுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழும் அபாயத்தில் இருந்த பிர்ச் பனிப்பாறையின் ஒரு பெரிய பகுதி, நேற்றுப் பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் ஒரே நேரத்தில் உடைந்து விழுந்தது.
பனிப்பாறை சரிவு ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவான நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது.
பனிப்பாறை சரிந்து விழுவதையும், சிதைவுகள் வேகமாக பள்ளத்தாக்கை நோக்கி உருண்டு வருவதையும், ஒரு பெரிய தூசி மேகம் எழுவதையும் காட்டும் வீடியோக்கள் பரவி வருகின்றன.
நேற்றுக்காலை கன்டோனல் அரசாங்கம், குறித்த பகுதியில் ஒரு “சிறப்பு சூழ்நிலையில்” இருப்பதாக அறிவித்திருந்தது.
நேற்று அதிகாலை 4 மணியளவில், ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் பனிப்பாறை சரிந்ததைப் போன்றது அந்த சரிவு ஏற்பட்டது.
எனினும் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், பனி, பாறை மற்றும் பனியின் சிதைவுகள் பிளாட்டன் கிராமத்தை அடையவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய பனிப்பாறைச் சரிவு கிராமத்தின் பெரும் பகுதியை புதைத்துள்ளது.
கிராமத்தில் 90 சதவீதம் அழிந்து போயுள்ளதாகவும், 50 தொடக்கம் 200 மீற்றர் வரை உயரமாக மண், பாறைகள், சிதைவுகள் அதன் மீது மூடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்- swissinfo