சென்.காலன் ரயில் நிலையத்தில் இன்று ரயில் சேவைகள் முடங்கியதால் பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர்.இன்று மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
தொழில்நுட்பக் கோளாறினால் இந்த நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
EC, IC1, IC5, IR, IR13, RE1, S1, S2, S4, S5, S81, and S82 ஆகிய பாதைகளில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதனால் St. Gallen மற்றும் Gossau SG இடையே மாற்றுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பிற்பகல் 2 மணிக்கு சேவைகள் வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தாமதங்கள், ரத்துகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo