21.6 C
New York
Wednesday, September 10, 2025

காருக்கு அடியில் சிக்கிய 4 வயதுக் குழந்தை.

இண்டஸ்ட்ரிஸ்ட்ராஸில் உள்ள லாண்டி வாகன நிறுத்துமிடத்தில் காருக்கு அடியில் சிக்கிய 4 வயதுக் குழந்தை காயம் அடைந்துள்ளது.

57 வயது நபர் ஒருவர் லாண்டி வாகன நிறுத்துமிடத்தில் இருந்து, தனது காரை ஓட்டிச் சென்ற போது,  பிரதான நுழைவாயிலுக்கு  அருகே,  ​​4 வயது சிறுவன் காருடன் மோதி பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டான்.

கார் நிறுத்தப்பட்ட போது, காரின் அடியில் சிக்கிய சிறுவன் வழிப்போக்கர்களின் உதவியுடன், காரை தூக்கி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.

சிறுவனின் நிலை குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

மூலம்- polizei-schweiz.ch

Related Articles

Latest Articles