17.5 C
New York
Wednesday, September 10, 2025

மலையேற்ற விபத்தில் இளம்பெண் மரணம்.

லூசெர்னில் உள்ள ஃப்ளூஹ்லியில் மலையேற்ற விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.

வியாழக்கிழமை மாலை 5 மணிக்குப் பின்னர், ஒரு பெண் விழுந்து விட்டதாக லூசெர்ன் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

27 வயதான அந்த பெண் லாட்காஸ்லிக்கு அருகிலுள்ள பிரையன்செர்கிராட்டில் தவறி விழுந்திருக்கலாம்.

அதையடுத்து, ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles