சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு புதைபடிவ வேட்டைக்காரர், தனது பாய்மரப் படகில் ஆற்றில் பயணம் மேற்கொண்டபோது, 20,000 ஆண்டுகள் பழமையான கம்பளி யானையின் (woolly mammoth) பல்லைக் கண்டுபிடித்துள்ளார்.
ஆர்காவ் கன்டோனில் உள்ள பேடனுக்கு அருகிலுள்ள லிம்மாட் ஆற்றில் என்ரிகோ கேவ்டன் இந்த யானைப் பல்லைக் கண்டுபிடித்தார்.
ஆற்றங்கரையில் பள்ளங்கள் காணப்பட்ட விசித்திரமான தோற்றமுடைய பொருளை கேவ்டன் கண்டார்.
பாறைகள் மற்றும் புதைபடிவங்களில் அவர் ஆர்வமாக இருப்பதால், கேவ்டன் உடனடியாக அது ஒரு யானையின் பல்லாக இருக்கலாம் என்று சந்தேகித்தார்.
வீட்டில், அவர் கணினியில் அமர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் அவரது சந்தேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்டது ஒரு யானையின் பல் ஆகும்.
பரிசோதனைகளின்படி, கம்பளி யானையின் கடைவாய்ப்பற்கள் தான் அது என்றும், மிகவும் இளமையாக – சுமார் 25 வயதில் அந்த யானை இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
கம்பளி யானைகள் 70 ஆண்டுகள் வரை வாழக் கூடியவை.
கார்பன் டேட்டிங்கிற்கு – பல்லில் உள்ள கொலாஜன் காணாமல் போயிருந்தது. அது பல ஆண்டுகளாக கழுவப்பட்டிருக்கலாம் என்று வெக்மேன் கூறினார்.
இருப்பினும், அந்த யானை சுமார் 18,000 முதல் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo

