23.5 C
New York
Thursday, September 11, 2025

அடுக்குமாடிக் குடியிருப்பு தீவிபத்தில் பெண் பலி.

துனில் உள்ள உல்ம்வெக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை, காலை 9:30 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

வீட்டில் இருந்து புகை  வருவதாக பெர்ன் கன்டோனல் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது நிலையில்,  அங்கு சென்ற அவசரகால பணியாளர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் இறந்த நிலையில் ஒருவரது சடலத்தைக் கண்டுபிடித்தனர்.

இறந்தவர் பெர்ன் கன்டோனைச்  சேர்ந்த 69 வயதான சுவிஸ் பெண்.

அந்தப் பெண்ணுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. இது ஒரு விபத்து என்று காவல்துறையினர் நம்புகின்றனர்.

தீவிபத்தினால், அடுக்குமாடி கட்டடத்திலிருந்த ஏனைய குடியிருப்பாளர்கள் சிறிது நேரம் வெளியேற்றப்பட்டனர்.

விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles