கிராபுண்டனில், கால்நடைகள் மிதித்து, அதனை ஓட்டிச் சென்ற மூதாட்டி உயிரிழந்தார்.
91 வயதான உள்ளூர் பெண், ஆண்டியஸ்டில் உள்ள ஒரு குறுகிய பாதை வழியாக கால்நடை கூட்டத்தை அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
அந்த கால்நடைகள் ஆல்பைன் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.
புதன்கிழமை காலை 7 மணிக்கு சற்று முன்னர், அந்தப் பெண் ஒரு குறுகிய பாதை வழியாக கால்நடைகளை வழிநடத்த முயன்ற போது தடுக்கி விழுந்துள்ளார்.
அவரை மிதித்துக் கொண்டு கால்நடைகள் சென்றுள்ளன.
அவரது மகன் தரையில் அசையாமல் கிடந்த தாயைக் கண்டு அவசர சேவைகளுக்கு அறிவித்தார்.
உடனடியாக அவர்கள் சம்பவ இடத்தில் சிகிச்சைகளை மேற்கொண்டும், அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மூலம்- bluewin