7.8 C
New York
Saturday, October 10, 2026

சுரங்கப் பாதையில் மோசமான விபத்து- பெண் பலி.

A15 மோட்டார் பாதையில் உள்ள பால்மென்ரெய்ன் சுரங்கப்பாதையில் நேற்று மாலை, 6:15 மணியளவில் ஒரு  மோசமான விபத்து இடம்பெற்றுள்ளது.

ராப்பர்ஸ்வில்-ஜோனாவிலிருந்து ரீச்சன்பர்க் நோக்கி செல்லும் மோட்டார் பாதையில் 59 வயது பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார்,  பால்மென்ரெய்ன் சுரங்கப்பாதையில், வலதுபுற சுரங்கப்பாதை சுவரில் முட்டிய பின்னர்,  மையக் கோட்டைக் கடந்து, எதிரே வந்த காரின் மீதும், பின்னர் மற்றொரு காரின் மீதும் மோதியது.

- Advertisement -

விபத்துக்குக் காரணமான பெண் இந்த விபத்தில் மரணமானார். மற்றொரு வாகனத்தில் இருந்த 4 வயதுச் சிறுவன், உள்ளிட்ட பலர் காயம் அடைந்துள்ளனர் என சென் காலன் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles