24.9 C
New York
Wednesday, April 1, 2026

புகலிடக் கோரிக்கையாளரை கடுமையாக அணுக கோரும் நாடாளுமன்றம்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட இரண்டு முன்மொழிவுகளை சுவிசின் மாநிலங்கள் சபை அங்கீகரித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட இரண்டு முன்மொழிவுகளை சுவிசின் மாநிலங்கள் சபை அங்கீகரித்துள்ளது.

தேசிய கவுன்சிலைத் தொடர்ந்து, நேற்று மாலை மாநிலங்களின் சபையும், SVPயின் முன்மொழிவுகளை அங்கீகரித்தது.

நிலையான புகலிடக் கொள்கையை இந்த முன்மொழிவுகள் கோருகின்றன.

இதன்படி, எதிர்காலத்தில், குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடும், புகலிடக் கோரிக்கையாளரின், நடமாட்ட சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாவது முன்மொழிவு, தண்டனை பெற்ற குற்றவாளிகள் எதிர்காலத்தில் புகலிடச் செயல்முறையிலிருந்து விலக்கப்பட வேண்டும் அல்லது அவர்களின் குடியிருப்பு அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இந்த  இரண்டு திட்டங்களும் ஏற்கனவே தேசிய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இது இப்போது பெடரல் கவுன்சிலுக்கு அனுப்பப்படும்.

புகலிட உரிமை இல்லாதவர்களை வெளியேற்றுவதில் கன்டோன்களுக்கு கூடுதல் பெடரல் ஆதரவை வழங்கக் கோரும் FDP நாடாளுமன்றக் குழுவின் தீர்மானத்திற்கும் மாநிலங்கள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நடவடிக்கை ஏற்கனவே தேசிய சபையினால் நிறைவேற்றப்பட்டது.

இதுவும் பெடரல் கவுன்சிலுக்கு அனுப்பப்படும்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles