16.6 C
New York
Wednesday, September 10, 2025

உலகின் முதல் செல்வந்த நாடாக நீடிக்கும் சுவிஸ்- அமெரிக்கா திடீர் வளர்ச்சி.

சுவிட்சர்லாந்தில் தனிநபர் ஒருவரிடம் உள்ள சராசரி செல்வ கடந்த ஆண்டு 561,000 சுவிஸ் பிராங்காக உயர்ந்துள்ளதாக UBS யின் உலகளாவிய செல்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

இதன் மூலம், உலகின் பணக்கார நாடு என்ற நிலையை சுவிட்சர்லாந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஒரு வயது வந்தவரின் சராசரி செல்வம் (மக்கள் தொகை 8.8 மில்லியன்) 2024 இல் 561,000 சுவிஸ் பிராங்காக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 3% அதிகமாகும்.

புதன்கிழமை UBS வெளியிட்ட உலகளாவிய செல்வ அறிக்கை 2025 இன் படி, சுவிசைத்  தொடர்ந்து அமெரிக்காவில்  செல்வம் கணிசமாக உயர்ந்துள்ளது.

UBS இன் படி, கடந்த ஆண்டு அமெரிக்க குடியிருப்பாளர்கள் குறிப்பிடத்தக்க வகையில் பணக்காரர்களாக மாறியுள்ளனர்.

முந்தைய ஆண்டை விட அங்கு  செல்வம் 11% அதிகரித்துள்ளது.

 2024 ஆம் ஆண்டில் மட்டும், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 380,000 பேர் மில்லியனர்களாக மாறினர்.

கிட்டத்தட்ட 24 மில்லியன் அமெரிக்கர்கள் இப்போது டொலர் மில்லியனர்களாக உள்ளனர்.

உலகளவில் உள்ள அனைத்து மில்லியனர்களில் சுமார் 40% பேர் அமெரிக்கர்கள் ஆவர்.

அதேவேளை, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் சுமார் 6.3 மில்லியன் மில்லியனர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles