16.6 C
New York
Thursday, September 11, 2025

நச்சுராபிளான் ஓர்கானிக் சலாட் கலவையில் லிஸ்டீரியா தொற்று.

100 கிராம் பைகளில் அடைக்கப்பட்ட நச்சுராபிளான் ஓர்கானிக் சலாட் கலவையை கூப் மீறப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இந்த தயாரிப்பில் லிஸ்டீரியா என்ற பக்டீரியா இருக்கலாம், என்றும் இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பொதிகளை உட்கொள்ள வேண்டாம் என்று கூப் பரிந்துரைத்துள்ளது.

2025 ஜூன் 19, திகதியிட்ட, A516254101 தொகுதியுடன் தொடர்புடைய பொதிகள் மட்டுமே திரும்பப்  பெறப்படுகின்றன.

இந்த தயாரிப்பு EAN குறியீடு 7610848666899, ஆட்டிக்கல் எண் 4.426.050 ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது 1.95 பிராங் விலையில் விற்கப்படுகிறது.

கூப்பின் கூற்றுப்படி, இந்த சலாட்கள் ஜூன் 13 முதல் 18, 2025 வரை கூப் பல்பொருள் அங்காடிகள், கூப் சிட்டி கடைகள் மற்றும் coop.ch வலைத்தளத்தில் விற்கப்பட்டன.

விற்பனையில் இருந்த பொதிகள் உடனடியாக திரும்பப் பெறப்பட்டன.

இந்த தயாரிப்பை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதை எந்த விற்பனை நிலையத்திற்கும் திருப்பி அனுப்பலாம்.

மேலும் பற்றுச்சீட்டு இல்லாமல் கூட பணம் திரும்ப வழங்கப்படும்.

இந்த திரும்பப் பெறுதலால் மற்ற பயன்பாட்டு திகதிகள் பாதிக்கப்படாது என்று கூப் பல்பொருள் அங்காடி தெரிவித்துள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles