சூரிச் சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து நேற்றுக்காலை பல டிராம் பாதைகளில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக VBZ அறிவித்தது.
இந்த இடையூறு இன்று காலை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப உள்கட்டமைப்பு இடையூறே இதற்குக் காரணமாகும்.
சூரிச் HB இலிருந்து குன்ஸ்தாஸ், ஹால்டெனெக் மற்றும் பெல்லூவ் திசையில் சென்ட்ரல் வரையிலான 3, 4, 6, 7, 10 மற்றும் 11 வழித்தடங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
மூலம் – 20min.