லொசானில் பொலிசார் துரத்திச் சென்ற போது விபத்துக்குள்ளாகி, 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை இரவு 11:15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ப்ளைன்ஸ்-டு-லூப் வீதியில், ஹெல்மெட் இல்லாமல் ஒரு பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதைக் கண்ட பொலிஸ் அதிகாரி, அவரைத் தடுக்க முயன்றார்.
அவரைக் கண்டதும், அந்த இளம் பெண் திரும்பி, பொலிஸ் சோதனைச் சாவடியிலிருந்து தப்பிக்க வேகமாகச் சென்றார்.
போலீஸ் அதிகாரி அந்த இளம் பெண்ணை விரட்டிச் சென்ற சிறிது நேரத்திலேயே, ஒரு சந்தியில், மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து, புல்வெளிப் பகுதியில் விபத்துக்குள்ளானார்.
லொசானில் வசிக்கும் போர்த்துகீசியரான அந்தப் பெண், பொலிஸ் அதிகாரிகளால் விரைவாக மீட்கப்பட்டு, அம்புலன்ஸ் மற்றும் அவசர மருத்துவக் குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டார்.
பலத்த காயங்களுடன் லொசான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அன்று இரவே மரணமானார்.
மூலம்- 20min.