ஜூக் கன்டோனில் உள்ள ஓபரேகரியில் நேற்று மதியம் 12:15 மணியளவில், பாராகிளைடிங் விபத்து ஏற்பட்டது.
இதன்போது, 59 வயது நபர் ஒருவர் தரையில் இருந்து சுமார் 25 மீட்டர் உயரத்தில் மரங்களில் சிக்கிக் கொண்டார்.
மணிக்கணக்கில் அவர் மரங்களின் உச்சியில் சிக்கிக் கொண்டு அந்தரத்தில் தொங்கினார்.
விபத்தை அடுத்து, பாதிக்கப்பட்டவர் தனது சக ஊழியரிடம் தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை விடுவிக்க முயன்றார்.
இரவு 7 மணியளவில் இருவரும் அவசர சேவைகளுக்கு தகவல் அளித்ததாக ஜூக் காவல்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.
இரவு 9 மணியளவில், ஜூக் தீயணைப்புப் படையின் பாதுகாப்பு மற்றும் மீட்பு தொழில்நுட்பக் குழுவின் நிபுணர்களால் பாராகிளைடர் விமானி மரங்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சம்பவ இடத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன, ஆனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
அந்த நபர் திடீரென உயரத்தை இழந்து விபத்துக்குள்ளானதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.